பயிற்சி போட்டியில் பும்ரா அடித்த பந்து பந்து பட்டு தரையில் சுருண்டு விழுந்த ஆஸி வீரர் – வைரலாகும் வீடியோ

Bumrah-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி முதல் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது பகலிரவு போட்டியாக வரும் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்குவதற்கு முன்னதாக இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணி ஆகியவை தற்போது மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் தற்போது இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்து முடித்தது.

Bumrah

- Advertisement -

முதல் நாளின் இரண்டாவது செக்ஷனின் போது 194 ரன்களுக்கு இந்திய ஏ அணி ஆல்-அவுட் ஆனது. துவக்க வீரர்களான பிரித்வி ஷா 40 ரன்களும், 3வது வீரராக களமிறங்கிய கில் 43 ரன்கள் குவித்தனர். அதன்பின்னர் விகாரி, ரஹானே, சஹா, பண்ட் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதிநேரத்தில் கடைசி விக்கெட்டுக்கு கைகோர்த்த பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் ஓரளவு இந்திய அணியை ரன்களை குவித்து காப்பாற்றினார் என்று கூற வேண்டும்.

ஏனெனில் பத்தாவது வீரராக களமிறங்கிய பும்ரா தனது முதல் அரை சதத்தை இந்த போட்டியில் பூர்த்தி செய்தார். 57 பந்துகளை சந்தித்த அவர் 55 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசி வீரராக களமிறங்கிய சிராஜ் 34 பந்துகளை சந்தித்து 22 ரன்களை குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேமரூன் கிரீன் வீசிய பந்தை பும்ரா பலமாக நேர் திசையில் அடித்தார். அந்த பந்து நேராக சென்று கிரீன் தலைப்பகுதியில் தாக்கியது. பந்து பட்டவுடன் கீழே விழுந்த அவர் சற்று நேரம் பொருத்து சுதாரித்து எழுந்தார். தலையில் பந்து பலமாக தாக்கியதை அடுத்து அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்குமா ? மூளை அதிர்வு ஏற்பட்டு இருக்குமா ? என்பதை மருத்துவர் குழு சோதனை செய்ய உள்ளது.

இதன்காரணமாக தற்போது கன்கஷன் விதி முறையின் மூலம் அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாடாமல் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement