வலைப்பயிற்சியில் பந்துவீச உள்ள பும்ரா. எப்போது அணியில் இணைகிறார் தெரியுமா ? – ரவி சாஸ்திரி கொடுத்த விளக்கம்

Bumrah

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஆக திகழ்கிறார். இவரது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். முக்கிய கட்டங்களிலும், போட்டியின் திருப்புமுனை ஏற்படுத்தும் நேரத்திலும் இவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு பல முறை கை கொடுத்துள்ளது.

Bumrah

உலக அளவிலும் சிறப்பாக பந்து வீசி வரும் பும்ரா அண்மைக்காலமாக காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார். அவரது பந்து வீச்சினால் ஆக்ஷனால் முதுகெலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை எடுத்து பும்ரா லண்டனுக்கு சென்று அறுவை சிகிச்சை இன்றி திரும்பி இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

விரைவில் இந்திய அணியில் இணைவார் என்று கருதப்பட்ட அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு விசாகப்பட்டினம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு பந்துவீச உள்ளார். அவரின் இந்த வலைப்பயிற்சியில் சோதனைக்கு பிறகு அவரை மீண்டும் அவரை சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்பலாமா ? இல்லையா ? என்று தெரியவரும்.

Bumrah-1

பும்ராவின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுமாயின் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தொடரில் அவரை சேர்க்கவும் இந்திய அணி வீரர்கள் மற்றும் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் ரவிசாஸ்திரி பும்ராவின் வருகைக்காக தற்போது முயற்சிகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

bumrah

அதன்படி வரும் 18 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன் வலைப்பயிற்சியில் பும்ராவை பந்துவீச வைக்க ரவி சாஸ்திரி முடிவு செய்துள்ளார். இந்த வலை பயிற்சியின்போது பும்ராவின் உடற்தகுதி பந்துவீச்சுக்கு ஒத்துழைக்குமாயின் அவரை தொடர்ந்து தேசிய அகாடமியின் கண்காணிப்பில் வைத்து ஆஸ்திரேலிய தொடரின் போது களமிறக்கும் திட்டத்தையும் ரவிசாஸ்திரி வைத்துள்ளதாக தெரிகிறது.