
நியுஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து ஒருநாள் தொடரை இழந்தது. இந்த தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சொதப்பலான பந்துவீச்சு காரணமாக அமைந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜஸ்பிரிட் பும்ரா முறை கடுமையாக சொதப்பி வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக காயத்தில் இருந்த அவர் தற்போது மீண்டும் அந்த இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.
ஆனால் அவரால் காயத்திற்கு முன்னதாக அற்புதமாக வீசியதை போல் வீச முடிவதில்லை காயத்திற்குப் பின்னர் வந்த அவர் ஐந்து ஒருநாள் போட்டியில் பங்கேற்று உள்ளார். அதில் வெறும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதனை தாண்டி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் விக்கெட் இல்லாமல் சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் சொதப்புவது முதல் இதுவே முதல் முறை, இரண்டாவது போட்டியில் டெத் ஓவர்களில் 3 ஓவர்கள் வீசிய 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார் .அதிலும் அதில் வீசிய கடைசி ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து சொதப்பினார். இதில் ஒரு விக்கெட் எடுத்து இருந்தால் கூட இந்திய அணியின் பக்கம் ஆட்டம் திரும்பியிருக்கும்.
இவ்வாறு காயத்திற்கு பின்னர் படுமோசமாக சொதப்பி வருகிறார் பும்ரா. அவருடைய தரத்திற்கு அவர் இந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை ஆவது தன்னந்தனியாக நின்று வெற்றி பெற்று கொடுத்திருக்கவேண்டும். இதனால் பும்ரா பழைய ஃபார்மில் இல்லை என ரசிகர்கள் கவலையுடன் இருந்து வருகின்றனர். மேலும் பும்ரா மீண்டும் தனது பார்முக்கு திரும்பும் வரை இந்திய அணிக்கு இந்த நிலைதானா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.