கோலி, ரோஹித்தை கடந்து கடந்த ஆண்டு அதிக சம்பளத்தை பெற்ற இளம் வீரர் – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வீரர்களின் சம்பளம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கேற்ப தரம்பிரித்து ஒப்பந்தம் செய்யப்படும். வீரர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் வழங்கப்படும். இந்த சம்பளத்தில் தகுதிக்கு ஏற்றவாறு பிரித்து வழங்கப்படும். அனைவருக்கும் அவர்களது கிரேட்டிற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும். வீரர்கள் எத்தனை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்களோ அதற்கு தகுந்தவாறு சம்பளம் வழங்கப்படும்.

IND

இந்திய அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட அதிகபட்சமாக 15 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டியில் விளையாட 6 லட்சமும், ஒரு டி20 போட்டியில் விளையாட 3 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியும் முடிகிறது. இதனால் இந்திய வீரர்களின் சம்பளம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பும்ரா அதிக சம்பளம் வாங்கிய முதல் இந்திய வீரராக இருக்கிறார். இவர் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ‘ஏ+’ பிரிவில் ஒப்பந்தமாகி இந்திய அணியில் விளையாடி வருகிறார். பும்ரா 2020ஆம் ஆண்டு 9 ஒருநாள், 4 டெஸ்ட் போட்டி, 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் மொத்தம் ரூ.1.38 கோடி சம்பளமாக பெற்று முதலிடத்தில் உள்ளார் பும்ரா.

Bumrah

இதையடுத்து விராட் கோலி 3 டெஸ்ட் 9 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி ரூ.1.29 கோடி சம்பளமாக பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 2 டெஸ்ட் 9 ஒருநாள் மற்றும் 4 டி-20 போட்டிகளில் விளையாடி 96 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

Bumrah

ரோகித் சர்மா 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய அணியின் வீரராக பும்ரா முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பாட்டியலில் புதுமுக வீரர்கள் சிலரும் இந்திய அணிக்காக அவிமுகமாகி இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement