டேல் ஸ்டெயினுக்கு அடுத்து ஸ்டீவ் ஸ்மித்தை இப்படி வீழ்த்துன 2 பவுலர் பும்ரா தான் – கெத்து காட்டிய கேப்டன்

Bumrah-and-Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சில் வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா :

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களை குவித்ததால் ஆஸ்திரேலிய அணியின் கை முதலில் ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்து இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் பும்ரா வீசிய முதல் பந்தியிலேயே கோல்டன் டக் அவுட்டானார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டாவது முறையாக கோல்டு டக் அவுட் செய்த பந்துவீச்சாளர் பும்ரா தான் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி என்பது டேல் ஸ்டெயின் அவரை கோல்டன் டக் அவுட்டாக்கி இருந்தார். அதனை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தை தற்போது பத்து ஆண்டுகள் கழித்து உம்ரா கோல்டன் டக் அவுட்டாக்கியுள்ளார். இந்த இரண்டு முறையுமே ஸ்டீவ் ஸ்மித் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல்நாள் ஆட்டத்தில் கேப்டன்சியில் அசத்திய பும்ரா.. அவர் எடுத்த முடிவை கவனிச்சீங்களா? – விவரம் இதோ

இந்திய அணிக்கெதிரான இந்த டெஸ்ட் தொடரில் அசத்துவார் என அனைவராலும் பேசப்பட்டு வந்த ஸ்டீவ் ஸ்மித்தை இப்படி முதல் இன்னிங்சிலேயே டக் அவுட்டாக்கி அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement