வீடியோ : கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பை தகர்த்த பும்ராவின் 100 ஆவது விக்கெட் – வெறித்தனம்

Bumrah-4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் இறுதி நாளான நேற்று இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, இரண்டாவது இன்னிங்சிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

bumrah 3

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வீரர் போப் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து இருந்தார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து இர்பான் பதான் (28 போட்டிகள்), முகமது ஷமி (29 போட்டிகள்), ஸ்ரீநாத் (30 போட்டிகள்) என அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். இந்நிலயில் தற்போது 24-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக விரைவாக 100 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் 18 போட்டிகளில் வைத்திருக்கிறார்.

bumrah 2

இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இந்த சாதனையை பும்ரா நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனையை அடுத்து தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பும்ரா நூறாவது விக்கெட்டாக வீழ்த்திய இங்கிலாந்து வீரர் அவுட் ஆகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பும்ரா வீசிய அந்த பந்தில் பேட்ஸ்மேன் என்ன செய்வது என்று தெரியாமல் பந்தை தடுக்க முயற்சிக்க அந்த பந்து கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பை பதம் பார்த்தது.

Advertisement