ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் பும்ரா வெளியேற – இதுதான் காரணம்

Bumrah

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடினார். இந்நிலையில் நான்காவது போட்டிக்கான இந்திய அணி தயாராகி வந்த நிலையில் திடீரென தனிப்பட்ட காரணத்திற்காக தன்னை விடுவிக்குமாறு பி.சி.சி.ஐ-யிடம் கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு நான்காவது போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

bumrah

மேலும் தற்போது அதனை தொடர்ந்து அவர் அந்த அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியது.

அதன் காரணமாக அவருக்கு பிசிசிஐ இந்த ஒட்டுமொத்த தொடரிலும் இருந்து விடுப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் அவர் அணியில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து ரசிகர்கள் குழப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது அதற்கான பதில் வெளியாகியுள்ளது.

Bumrah-1

அதன்படி பும்ராவிற்குப் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு தயாராக வேண்டி இருப்பதால் இந்த விடுப்பினை கேட்க்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த விடுப்பில் நான் திருமணத்திற்கு தயாராக எனக்கு போதுமான நாட்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி நான் திருமணத்துக்கு ரெடியாக இது உதவியாக இருக்கும் என பும்ரா பிசிசிஐ நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரிகள் தரப்பிலிருந்து உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

Bumrah

இதன் காரணமாக பும்ரா விரைவில் திருமண பந்தத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் யாரை திருமணம் செய்ய போகிறார். திருமண தேதி என அனைத்து விடயங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லாக்டவுன் முடிந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் தனது தோழியை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.