பும்ரா அடித்த அரைசதம். கையை மேல்தூக்கி அரண் அமைத்து வரவேற்ற சக வீரர்கள் – வைரலாகும் வீடியோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி முதல் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது பகலிரவு போட்டியாக வரும் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்குவதற்கு முன்னதாக இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணி ஆகியவை தற்போது மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் தற்போது இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்து முடித்தது.

Bumrah

- Advertisement -

முதல் நாளின் இரண்டாவது செக்ஷனின் போது 194 ரன்களுக்கு இந்திய ஏ அணி ஆல்-அவுட் ஆனது. துவக்க வீரர்களான பிரித்வி ஷா 40 ரன்களும், 3வது வீரராக களமிறங்கிய கில் 43 ரன்கள் குவித்தனர். அதன்பின்னர் விகாரி, ரஹானே, சஹா, பண்ட் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதிநேரத்தில் கடைசி விக்கெட்டுக்கு கைகோர்த்த பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் ஓரளவு இந்திய அணியை ரன்களை குவித்து காப்பாற்றினார் என்று கூற வேண்டும்.

ஏனெனில் பத்தாவது வீரராக களமிறங்கிய பும்ரா தனது முதல் அரை சதத்தை இந்த போட்டியில் பூர்த்தி செய்தார். 57 பந்துகளை சந்தித்த அவர் 55 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசி வீரராக களமிறங்கிய சிராஜ் 34 பந்துகளை சந்தித்து 22 ரன்களை குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியில் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்த பும்ரா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் வீரர்களின் ஓய்வு அறைக்கு செல்லும் வழியில் இந்த அசத்தலான பேட்டிங்கை கண்ட இந்திய அணியின் சக வீரர்கள் அவருக்கு கைகளை மேலே தூக்கி அரண் அமைத்து கௌரவ வரவேற்பு மரியாதை கொடுத்தனர்.

இதுதொடர்பான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பாக சமி 3 விக்கெட்டுகளையும், சைனி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement