சென்னை டெஸ்டில் விக்கெட் வீழ்த்தியன் மூலம் புதிய சாதனையை படைத்த பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இன்று சென்னை மைதானத்தில் துவங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர் பர்ன்ஸ் 33 ரன்களிலும், சிப்லி 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

sibley

- Advertisement -

மேலும் 3 ஆவதாக களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் குவித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் நாளைய போட்டியில் இன்னும் அவர் ரன்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்தியாவில் புதிய வினோதமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவை அனைத்தும் வெளிநாடுகளில் வந்தவை. இதுவரை விளையாடிய 17 போட்டிகளில் வெளிநாடுகளில் மட்டுமே பும்ரா விளையாடி உள்ளார்.

Bumrah

இந்தியாவில் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்று விளையாடிய பும்ரா முதல் போட்டியிலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியாவில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்த அவர் இந்த போட்டியில் மூலம் அந்த குறையை நீக்கி விட்டார். இந்திய மண்ணில் தனது முதல் ஆட்டத்தை விளையாடிய அவர் இன்று சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

bumrah

டேனியல் லாரன்ஸை ரன் எதுவும் எடுக்க விடாமல் ஆட்டமிழக்கச் செய்த அவர் போட்டியின் கடைசி ஓவரில் துவக்க வீரர் சிப்லியை சதம் அடிக்க விடாமல் 87 ரன்களில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement