பாண்டியவை கேப்டனா போட்டு ரோஹித்தை மட்டுமல்ல அவரையும் அவமான படுத்திட்டீங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

Rohit-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மாற்றம் சில அணிகளுக்குள் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக அற்புதமான கேப்டன்சியை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் தங்களது அணிக்கு டிரேடிங் செய்திருந்தது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியது.

மும்பை அணி இப்படி ஒரு யுத்தியை கையாண்டு மீண்டும் பாண்டியாவை தங்களது அணியில் இணைத்தது அனைவரையும் மலைக்க வைத்தது. மேலும் ஹார்டிக் பாண்டியாவை மும்பை அணி டிரேடிங் செய்ததே அடுத்த கேப்டனாக அவரை நியமிக்கத்தான் என்று பலராலும் பேசப்பட்ட வேளையில் அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியாவை 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அதிகாரபூர்வமாக நியமித்தது. அதோடு ரோகித் சர்மா கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தது.

இதன் காரணமாக ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதோடு தற்போது கூடுதலாக ரோஹித் சர்மாவின் ரசிகர்களை தவிர்த்து பும்ராவின் ரசிகர்களும் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததன் முடிவில் அதிருப்தியில் உள்ளனர் என்பது போன்று சில தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

- Advertisement -

அந்த வகையில் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் மும்பை அணிக்காக உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி இருந்தும் அவர்களை அசிங்கப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் வேதனையை தெரிவித்து வருவதோடு பும்ராவின் பெயரையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பும்ராவின் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் :

இதையும் படிங்க : காலங்களை கடந்து நிற்கும் தல தல தான்.. கடைசி வரை தோனியை மிஞ்ச முடியாத ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குவது பிரச்சினையாக இல்லை. ஆனால் மும்பை அணியின் அடுத்த கேப்டனாக நேர்மையாக இருந்து வரும் பும்ராவை நியமித்திருக்க வேண்டும். அதனை தவிர்த்து வேறு அணிக்கு சென்ற ஒரு வீரரை மீண்டும் அணிக்குள் இணைத்து அவரை கேப்டனாக்கியது ரோகித் சர்மாவை மட்டுமின்றி பும்ராவையும் அவமானப்படுத்தும் செயலாக உள்ளது என்று தனது காட்டமான கருத்துக்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement