சத்தமில்லால் அஷ்வினின் மிகப்பெரிய சாதனையை சமன்செய்த பும்ரா – விவரம் இதோ

Bumrah-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை குவிக்க அதன்பின்னர் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

toss

நேற்றைய போட்டியில் கடந்த சில தொடர்களாகவே காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் டி20 அரங்கில் அஸ்வினின் முக்கியமான சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

அதன்படி இதுவரை 46 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள அஸ்வின் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அதனை தற்போது 44 ஆவது போட்டியில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

Bumrah

ஆனால் ஏற்கனவே அதே 52 விக்கெட்டுகளை 36 போட்டியில் வீழ்த்தி சாஹல் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டியில் பும்ரா முதல் இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்த தொடரில் சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த பட்டியலில் முன்னேற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -