கல்யாணம் பண்ணதால பின்னடைவை சந்தித்த யார்க்கர் கிங் பும்ரா – இவருக்கு இப்படி ஒரு சோதனையா ?

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடந்த பல ஆண்டுகளாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலமாக மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டிலிருந்தே உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் குறைந்துள்ளதால் பும்ராவால் நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பும்ரா சறுக்கலை கண்டுள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்து அணியை சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் முதலிடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கை வங்கதேசம் ஒருநாள் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த மெஹதி ஹாசன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

அதேபோன்று அந்த அணியை சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தற்போது 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக அவரது திருமணம் பார்க்கப்படுகிறது.

Bumrah

ஏனெனில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியதற்கு பின்னர் தனது திருமணம் நடைபெற்ற காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை.

Bumrah

மேலும் பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல இருப்பதால் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் ஒருநாள் தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாது. இதன் காரணமாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் மேலும் அவர் பின்னடைவை சந்திக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement