வெறும் 11 போட்டிகளில் மிகப்பெரிய உலகசாதனை படைத்த பும்ரா – சாதனை விவரம் இதோ

Bumrah-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஒரு வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

IND

- Advertisement -

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் 8 ஓவர் வீசிய பும்ரா 3 மெய்டன் ஓவர்கள் வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் குறைந்து ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

bumrah

இதுவரை வெறும் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள பும்ரா 55 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement