ஆடுனதே மொத்தம் 10 போட்டி தான். அதுக்குள்ள இப்படி ஒரு சாதனையா ? – கலக்குறீங்க பும்ரா

Bumrah

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தப் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரஹானே 81, ஜடேஜா 58 ரன்களும் குவித்தனர்.

bumrah 2

அதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்களை குவித்தது. இந்தியாவின் சார்பாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், முகமது சமி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பும்ரா இந்த போட்டியில் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது நேற்றைய ஆட்டத்தின் டேரன் பிராவோ விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 50 விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா வெறும் 21 இன்னிங்ஸ்களில் மட்டும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ஷமி 24 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.