அச்சு அசலாக அணில் கும்ப்ளேவை போன்றே லெக் ஸ்பின் வீசி அசத்திய பும்ரா – பி.சி.சி.ஐ வெளியிட்ட வீடியோ

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவத்திலும், அனைத்து அணிகளுக்கும் எதிராக தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் திணறடித்து வரும் இவர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

bumrah

- Advertisement -

வித்தியாசமான பௌலிங் ஆக்சன், திணறடிக்கும் வேகம் என அவரது பந்து வீச்சு அசத்தலாக இருக்கும், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை போன்று வெகு தூரத்தில் இருந்து ஓடி வராமல் குறுகிய தூரத்தில் இருந்து ஓடி வந்தாலும் அதி வேகத்தில் பந்து வீசுவதில் வல்லவர். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உலகெங்கும் உள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள இவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இன்றைய பயிற்சியின் போது அவர் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அணில் கும்ப்ளே போன்று பந்து வீசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வலைப்பயிற்சியில் பும்ரா கும்ப்ளே போன்று வீசிக்கொண்டே இருந்தார். இதனை பி.சி.சி.ஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது மட்டுமின்றி பெரிய அளவில் கருத்துக்களையும், விமர்சனங்களை பெற்று வருகிறது. அவ்வப்போது இந்திய வீரர்கள் இதே போன்று செய்யும் செயல்கள் வைரலானாலும் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இவ்வாறு பந்து வீசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement