டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது மோசமான வேலையை காட்டிய பும்ரா – அதுவும் ஒரே ஓவர்லயா ?

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் எளிதாக கிடைக்கவிருந்த வெற்றியை தவறவிட்ட இந்திய அணியானது இந்த போட்டியில் வெற்றிபெற முனைப்பு காட்டி வருகிறது. அதேவேளையில் இங்கிலாந்து அணியும் தங்களது பலத்தை இந்திய அணிக்கெதிராக காண்பிக்க சிறப்பாக விளையாடி வருகிறது.

indvseng

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி தனது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 391 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணியை விட தற்போது இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களான சிராஜ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். அதேவேளையில் முதலாவது போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியில் 26 ஓவர்கள் வீசி 79 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் ஏமாற்றம் கொடுத்தார்.

Bumrah 1

அவர் விக்கெட் வீழ்த்தாதது கூட ஏமாற்றம் கிடையாது. ஆனால் போட்டியின் 125 ஓவரை வீசிய அவர் அதே ஓவரில் 4 நோ பால்களை வீசி சொதப்பினார். எப்பொழுதும் டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான கட்டத்தில் நோபால் வீசும் தன்மை உடைய பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நோபால் வீசியுள்ளது ரசிகர்களிடையே கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில் அவர் வெறும் நான்கு நோ பால்கள் மட்டும் வீசவில்லை. இந்த இன்னிங்சில் 13 நோ பால்களை அவர் வீசியுள்ளார். பும்ராவின் இந்த செயல் தற்போது ரசிகர்களிடையே கிண்டலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement