பும்ரா காயத்திற்கு இதுதான் காரணமா ? குணமடைய இத்தனை மாதங்கள் ஆகுமா ? – நெஹ்ரா பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்கிறார். உலகின் தற்போதைய நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான இவர் உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

Bumrah

- Advertisement -

அதன்பிறகு முதுகுவலி காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்க மற்றும் வங்கதேச தொடரில் அவர் இடம்பெறவில்லை. மேலும் அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி காரணமாக அவர் இரண்டு மாதங்கள் இந்திய தேசிய அணியில் இணைந்து பெங்களூரில் பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பும்ராவின் காயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான நெஹ்ரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த முதுகு வலிக்கும் அவர் பந்து வீசும் முறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் பந்து வீசும் இந்த ஸ்டைலால் தான் அவருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் இதனை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அவர் பந்து வீசும் முறைக்கும் அவருக்கு ஏற்பட்டுள்ள வலிக்கும் சம்பந்தமே கிடையாது.

Bumrah-1

அவரது பந்துவீசும் ஸ்டைலை மாற்றினால் அவர் சிறப்பாக பந்து வீச முடியாது. எனவே அவர் அந்த ஸ்டைலிலே பந்துவீச்சை தொடர்வார். மேலும் பழையபடி திரும்பி வந்தவுடன் அவர் அப்படியே பந்துவீசி அதே வேகத்துடன் அதே திறமையுடன் பந்து வீசுவார் என்றும் அவரது வலி குறைய இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement