கஷ்டப்பட்டவரு வெளியில் உட்காந்து இருக்க ஈஸியா இன்னைக்கு பும்ரா படைக்க இருக்கும் சாதனை – விவரம் இதோ

Bumrah-1

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Cup

இந்நிலையில் தற்போது தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சாதனை யாதெனில் இதுவரை டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின், சாஹல் மற்றும் பும்ரா ஆகியோர் மூவரும் சம நிலையில் இருக்கின்றனர். மூவரும் தலா 52 விக்கெட்டுகளை இதுவரை சர்வதேச டி20 போட்டியில் வீழ்த்தியுள்ளனர்.

Bumrah

இன்றைய போட்டியில் பும்ரா மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அஸ்வின் 46 போட்டிகளில் 52 விக்கெட்டையும், சாஹல் 36 போட்டிகளில் 52 விக்கெட்டுக்களை, பும்ரா 44 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Chahal

சாஹல் இன்றைய போட்டியில் தேர்வாக மாட்டார். குல்தீப் மற்றும் சுந்தர் ஆகியோர் தொடர்வார்கள் என்று எண்ணும் பட்சத்தில் இந்த சாதனையை சாஹல் படைக்க அடுத்த தொடர் வரை காத்திருந்து தான் ஆகவேண்டும். ஆனால் நிச்சயம் பும்ரா இன்று இந்திய அணியில் பங்கேற்று விளையாடுவார் அதனால் இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தும்போது இந்த சாதனையை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.