வெறும் 12 போட்டிகளில் ஐ.சி.சி நிர்வாகத்தை அலறவிட்ட பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Bumrah-1

- Advertisement -

இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 62 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பும்ரா அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் தனது தரத்தை உயர்த்தி தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக தன்னை நிலைநாட்டி உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த 12 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் பும்ரா 3 ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

bumrah

தனது துவக்க போட்டியில் 85 ஆவது இடத்தில் இந்த பும்ரா வெறும் 12 போட்டிகளில் விளையாடி தற்போது மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து பும்ரா இப்படி சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் முதலிடத்தை விரைவில் அடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement