வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு சைகையால் பதிலளித்த கோலி மற்றும் பும்ரா

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிளாக்வுட் ஆட்டமிழந்த போது விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ரசிகர்களை நோக்கி வாயின் மீது கை வைத்து அமைதியாக இருக்கும்படி கூறிய ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அது ரசிகர்கள் மத்தியில் அதிகஅளவு விவாதிக்கப்படும் விடயமாகவும் தற்போது மாறியுள்ளது.

- Advertisement -

அதன்படி பிளாக்வுட் அவுட் ஆகும் முன்னர் ரசிகர்கள் பும்ரா மற்றும் கோலியை நோக்கி கோஷமிட்டதாகவும் அதற்கு பதிலடி தரும் வகையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி கோலி மற்றும் பும்ரா கொண்டாடினர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வந்தாலும் ஒரு சிலர் மீண்டும் கோலி இதுபோல ஆக்ரோஷத்தை காட்ட வேண்டாம் என்று என்பது போல கமெண்டுகளை பதிவிட்டு அந்த வீடியோவை ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement