
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது போட்டியானது இன்று அபுதாபி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், ஜத்தீந்தர் சிங் தலைமையிலான ஓமன் அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. இதன் காரணமாக இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கடைசி லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
இதன் காரணமாக இந்த கடைசி லீக் ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கி சூப்பர் போர் சுற்றின் போது புத்துணர்ச்சியுடன் அவர் அணிக்குள் வருவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் அடுத்து மித வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவிற்கும் ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பினிஷரான ரிங்கு சிங்கும் இடம்பெற்றுள்ளதால் அவருக்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்பதனால் இன்றைய போட்டியில் அவர் அணிக்குள் வருவார் என்று தெரிகிறது.
இப்படி இந்த முக்கிய இரண்டு மாற்றங்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிகழும். அது தவிர்த்து பேட்டிங் ஆர்டரிலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் செய்யாத வீரர்கள் சற்று முன்கூட்டியே களத்திற்கு வந்து பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஓமன் அணிக்கெதிராக டாஸ் வின் பண்ணா நிச்சயம் இந்திய அணி இந்த முடிவை தான் எடுக்கும் – சஞ்சய் பாங்கர் கருத்து
அதேபோன்று இன்றைய ஓமன் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி டாசில் வெற்றி பெற்றால் முதல் பேட்டிங்கையே தேர்வு செய்யும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு அடுத்து இந்திய அணியானது சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து செப்டம்பர் 21-ஆம் தேதி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.