28 ஆண்டுகால பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக நடந்த அறிய சம்பவம் – பும்ரா கம்மின்ஸ் ஜோடி சாதனை

Bumrah-and-Cummins
- Advertisement -

கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பானது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளிலும் மாற்றி மாற்றி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி விளையாடியிருந்த வேளையில் தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

கம்மின்ஸ் – பும்ரா இணைந்து ஒன்றாக சாதனை :

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதலாவது போட்டி நவம்பர் 22-ஆம் தேதி இன்று பெர்த் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஒன்று சேர்ந்து ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். அந்த சாதனை யாதெரில் :

இதுவரை 28 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இரு அணிகளை சேர்ந்த கேப்டன்களுமே முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக இதுபோன்ற ஒரு அறிய சம்பவம் நடைபெற்றது இல்லை.

- Advertisement -

பொதுவாக இரண்டு அணியின் கேப்டன்களும் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் அல்லது ஒரு அணியில் பேட்ஸ்மேன் ஒரு அணியில் பவுலராக இருப்பார்கள். இவ்வேளையில் தற்போது தான் முதல் முறையாக இரு அணி கேப்டனுமே வேகப்பந்து வீச்சாளராக இருக்கின்றனர். கபில் தேவிற்கு பிறகு வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா தான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 5 முறை பயணம் செய்தும் அஷ்வினுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு.. என்ன கொடுமை சரவணா இது? – விவரம் இதோ

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்ததின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் தற்போது பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement