இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த விடயம் இதுதான் – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 76 ரன்களும், அய்யர் 70 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 291 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணமாக ஒரு விடயம் பார்க்கப்படுகிறது அது யாதெனில் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட காயம்தான். ஏனெனில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை.

Jasprit Bumrah

அனுபவம் அற்ற பந்துவீச்சாளர்களை கொண்ட இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியதை இந்த போட்டியில் பார்க்கமுடிந்தது. தீபக் சஹர் மற்றும் ஷமி ஆகியோர் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினாலும் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் போனது. மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தும் சாஹலும் இந்த போட்டியில் விளையாடவில்லை. முக்கிய விக்கெட்டுகளை துவக்கத்தில் வீழ்த்தும் பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற சிறப்பான பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் போட்டியில் அழுத்தத்தைக் கொடுத்து இருக்க முடியும்.

- Advertisement -

Bhuvi

ஆனால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் கூட நேற்றைய போட்டியில் இல்லை என்பதனாலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழக்காமல் எளிதாக வெற்றி பெற்றது. இதனால் மீண்டும் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.