பாண்டியா தலையில் அணிந்திருக்கும் ஹெட்பேன்ட் குறித்து தனது கருத்தினை அளித்த பிராட் – என்ன சொன்னாரு தெரியுமா ?

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா தனது திறமையின் மூலம் உலகளவில் பாராட்டை பெற்றவர். பேட்டிங்கில் அதிரடி காண்பிக்கும் இவர் பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். கடந்த சில ஆண்டுகளாக பந்து வீசாமல் இருந்து வந்த ஹார்டிக் பண்டியா தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பந்து வீசி வருகிறார்.

pandya 1

- Advertisement -

எப்பொழுதுமே இந்திய அணியில் விதவிதமான ஹேர்ஸ்டைல், டிரஸ்ஸிங் என தனது உடல் அமைப்பிலும், உருவ அமைப்பிலும் வித்தியாசங்களைக் காட்டிவரும் ஹார்திக் பாண்டியா தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பந்துவீச வரும் போது தலையில் ப்ளூ பேண்டுடன் பந்து வீசினார்.

இவரின் இந்த புதிய ஸ்டைல் பலருக்கு வியப்பை தந்தது. அதே வகையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் அவரின் ஹெட்பேன்டை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளரான பிராட் எப்போதும் பந்துவீசும் போது தலையில் வெள்ளை நிற கர்சிப் கட்டிக்கொண்டு வீசுவார்.

அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் பேண்டுடடன் பந்துவீசி வரும் ஹார்டிக் பாண்டியா வை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய அவர் “லவ் இட் ஹார்டிக் பாண்டியா” என்று அவரது ஹெட்பேன்டை பிடித்துள்ளதாக தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி நிலையில் தற்போது இரண்டாவது போட்டியில் இவ்விரு அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement