121 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு பிராட் மற்றும் ஆண்டர்சனுக்கு ஏற்பட்ட பரிதாபம் – விவரம் இதோ

Anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 24ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த போட்டியில் விழுந்த 30 விக்கெட்களில் 28 விக்கெட்டுகள் ஸ்பின் பவுலர்களால் கைப்பற்றப்பட்டவை.

ind

- Advertisement -

மேலும் இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்ததால் இந்த மைதானம் குறித்து பெரிய சர்ச்சை வெடித்தது நாம் அறிந்ததே. இந்நிலையில் இந்த போட்டியில் நாம் அறியாத ஒரு விடயத்தை இந்த பதிவில் காண உள்ளோம். ஆண்டர்சன் இதுவரை இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 2003ஆம் ஆண்டு அறிமுகமாகி கிட்டத்தட்ட 18 வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 159 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 611 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவரது ஜோடியான ஸ்டூவர்ட் பிராட் 2007ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கி தற்போது வரை 146 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 517 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோடியாக பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர்.

anderson 1

இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக விளையாடியுள்ள இவர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விக்கெட் விழ்த்தாமல் இருந்ததில்லை. இவர்கள் இருவரில் யாராவது ஒருவராவது விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்கள். ஆனால் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது இவர்கள் இருவருமே இரண்டு இன்னிங்ஸ்களில் ஒரு விக்கெட்டுகளை கூட கைப்பற்றவில்லை.

Anderson

இதன் மூலம் 120 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு தற்போது முதல் முறையாக இருவரும் ஜோடியாக விளையாடி ஒரு விக்கெட் கூட விடாமல் ஒரு மோசமான சாதனையை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement