இந்தியாவில் தற்போது உள்நாட்டு மாநில அணிகளுக்கு இடையேயான சையது முஷ்டாக் அலி டி20 டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தினமும் பல ஆட்டங்கள் என்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று பெங்கால் அணியும் மும்பை அணியும் மோதின.
இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு மைதானத்தில் அரங்கேறியது. அது யாதெனில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பெங்கால் அணியின் வீரர் ஒருவர் மும்பை அணியின் பந்துவீச்சாளர் பந்தை சிக்சருக்கு அடிக்க பந்து மைதானத்தின் இருந்த ரசிகர்கள் மத்தியில் சென்றது. அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் சர்வதேச வீரரைப் போல ரிவர்ஸ் கப் முறையில் அந்த கேட்சை எளிதாகப் பிடித்து மீண்டும் மைதானத்திற்குள் தூக்கி வீசினார்.
அவரின் இந்த கேட்ச் ஒரு கிரிக்கெட் வீரர் கூட எளிதாக பிடிக்க கஷ்டப்படும் நிலையில் அவர் மிக எளிதாக நேர்த்தியாக பிடித்தார். தற்போது அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.