இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் – பிரைன் லாரா பேட்டி

Lara
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான் என வலுவான அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.

Cup

- Advertisement -

இவர்களுடன் ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் விளையாட இருக்கிறது. இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து அசத்தி வருகிறது. அதேபோல நியூசிலாந்து அணியை அந்தந்த நாட்டில் வாஷ்அவுட் செய்து அவர்களுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது ஹர்டிக் பண்டியா அணியில் திரும்பி இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்றே கூறலாம். அதேபோல ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது.

பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மிகவும் வலிமையாக உள்ளது. அதனைப்போன்றே வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து என அனைத்து அணிகளும் சிறப்பாக இருக்கின்றன. இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : மற்ற அனைத்து அணிகளையும் ஓப்பிடுகையில் இந்திய அணி வலுவாக உள்ளது. எனவே இந்திய அணி இந்த கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் அவர்களுக்கு கூடுதல் பலம் அதனால் அவர்கள் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

Wi-3

ஆனால் இந்த உலகக் கோப்பை எளிதாக அமையாது. ஏனெனில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சியளிக்கும். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது இல்லை என்றாலும் டி20 போட்டிகளில் எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் பலம் அவர்களிடம் உள்ளது என்று லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement