விராட் கோலி பெஸ்ட் தான் ஆனால் இவரது ஆட்டம் கிளாஸ். இளம் வீரரை புகழ்ந்த – பிரையன் லாரா

Lara
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான பிரைன் லாரா தற்போது வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரில் விளையாடி வருகிறார். உலக அளவில் சிறந்த பேட்ஸ்மென் என்று கருதப்படும் லாரா தற்போது இந்திய அணியின் வீரர்கள் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

lara

- Advertisement -

அதில் அவருக்கு பிடித்த வீரர் குறித்தும் அவர் தனது கருத்தினை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் பேட்டிங் ஒரு “தனி கிளாஸ் ரகம்” எனக்கு இப்போது பிடித்த பேட்ஸ்மேன் என்று கேட்டால் அது நிச்சயம் ராகுல் தான். அவரது பேட்டிங்கை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

தற்போது இருக்கும் கிரிக்கெட்டின் சிறந்த பொழுதுபோக்கு பேட்ஸ்மேன் என்றால் நான் நிச்சயம் ராகுலை தான் கூறுவேன் என்று கூறியுள்ளார். மேலும் விராட் கோலி இப்போது உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும், எனக்கு தனிப்பட்ட வகையில் ராகுல் பேட்டிங் தான் இப்போது பிடித்திருக்கிறது.

Rahul

மேலும் அவரை ஏன் டெஸ்ட் அணியில் வைத்து இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. அவரது உத்தி மற்றும் அவரது பேட் செய்யும் விதம் ஆகிய அனைத்தும் சிறப்பாக உள்ளது. நிச்சயமாக எந்த ஒரு அணியிலும் எந்த ஒரு வடிவத்திலும் அவர் இருக்கவேண்டும் என்பதையே நான் பார்க்கிறேன்.

- Advertisement -

அனைத்து வடிவங்களிலும் ஆடும் திறமைகள் அனைத்தும் அவரிடம் இருக்கிறது. எந்த ஒரு அணியாக இருந்தாலும் சரி நான் விராட் கோலிக்கு அடுத்து இவரது பெயரை தான் சொல்லுவேன். ராகுலே விராட் கோலிக்கு அடுத்த பெயராக இருக்க வேண்டும் என்று லாரா புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Rahul

டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வந்ததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ராகுல் விளையாடி வருகிறார் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடந்த பல தொடர்களாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement