ஃபார்ம் தான் பேசும்.. சிஎஸ்கே – ஆர்சிபி வாழ்வா – சாவா போட்டியின் வெற்றியாளரை கணித்த பிரையன் லாரா

Brian Lara 6
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் மும்பை பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எனவே மீதமிருக்கும் நான்காவது இடத்தை பிடிக்க நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளிடம் போட்டி காணப்படுகிறது.

குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெறும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதனால் நாக் அவுட் போன்ற அப்போட்டியில் வென்று சென்னை கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் வெற்றி நடை போடுமா அல்லது பெங்களூரு முதல் கோப்பையை வெல்லும் பயணத்தில் ஒரு படி முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

லாராவின் தேர்வு:
இந்நிலையில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்று நல்ல ஃபார்மில் இருக்கும் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி உச்சகட்ட ஃபார்மில் இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ப்ரைன் லாரா தெரிவித்துள்ளார். எனவே இப்போட்டியில் சென்னையை தோற்கடித்து பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் லாரா பேசியது பின்வருமாறு.

“ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறது. அந்த அணியை தவிர்த்து வேறு எந்த அணியும் இந்த வருடம் தொடர்ந்து 5 போட்டிகளில் வெல்லவில்லை. மேலும் அவர்களிடம் விராட் கோலி உச்சகட்டமான ஃபார்மில் இருக்கிறார். அதே போல மற்ற வீரர்களும் தங்களுடைய வேலையில் சிறப்பாக செயல்படுகின்றனர். அதுவே அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகும்”

- Advertisement -

“எனவே ஃபார்ம் என்பது முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். ஆர்சிபி அணி எப்போதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறை கோப்பையை வெல்வதற்கான பசியுடன் காத்திருக்கும் அவர்களுக்கு இது மகத்தான வாய்ப்பாகும். நல்ல ஃபார்மில் இருக்கும் அவர்களுடைய அணியில் விராட், டு பிளேஸிஸ், சிராஜ் போன்ற சீனியர் வீரர்கள் நன்றாக செயல்படுகின்றனர்”

இதையும் படிங்க: 76 போட்டிகளில் முதல் முறை.. குஜராத்தின் ஆறுதலை கலைத்த மழை.. ஹைதராபாத் தகுதி.. 2வது இடத்தை பிடித்ததா?

“எனவே இதுவரை நாம் பார்த்த அதே வேகத்தை ஆர்சிபி அணி இந்த போட்டியிலும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் நேரலையில் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார். இதற்கிடையே இப்போட்டியில் மழையும் வருவதற்காக காத்திருப்பதால் பெங்களூரு அணிக்கு கொஞ்சம் அதிக அழுத்தம் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் சென்னை தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement