நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே – இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆகியோர் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களாக போற்றப்படுகிறார்கள். அதில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களைக் கொண்ட இலங்கையைச் சேர்ந்த முரளிதரன் ஜாம்பவான்கள் சச்சின், லாரா உள்ளிட்ட உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களையும் மாயாஜால சுழலால் திணறடித்தார். இலங்கையின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரன் 800 விக்கெட்டுகள் என்ற யாராலும் தொட முடியாத சாதனையை படைத்துள்ளார். மறுபுறம் சுழலுக்கு பெரியளவில் சாதகமில்லாத ஆஸ்திரேலியாவில் பிறந்த வார்னே சுழலில் மாயாஜாலம் செய்தவர். அவர் பெரும்பாலும் தம்முடைய பந்தின் வேகத்தை ஆடுகளத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி சுழற்றுவதில் வல்லவர்.
வார்னே – முரளிதரன்:
அதனாலேயே அவருடைய பந்துகள் தரையில் பட்டதும் சுழன்று பேட்ஸ்மேனை ஏமாற்றி க்ளீன் போல்ட்டாக்கும். 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசிய பெருமைக்குரிய வார்னே சுழல் பந்து வீச்சின் கலைஞன் என்றே சொல்லலாம். அந்த இருவரில் யார் சிறந்த ஸ்பின்னர் என்பது நீண்ட காலமாகவே விவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை வார்னே வரலாற்றின் மிகச்சிறந்த ஸ்பின்னர் என்று ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
அதே சமயம் முரளிதரன் தமக்கு மிகப்பெரிய சவாலைக் கொடுத்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் லாரா பேசியது பின்வருமாறு. “வார்னே சிறந்தவர் என்பது உங்களுக்குத் தெரியும். அதே சமயம் முரளிக்கு எதிராக பேட்டிங் செய்ய செல்லும் போது நான் குழப்பமடைவேன். ஒரு கிரிக்கெட் தொடரில் நான் 3 போட்டிகளில் 688 ரன்கள் எடுத்திருந்தேன்”
லாராவின் தேர்வு:
“முரளிதரனுக்கு எதிராக முதல் அரை மணி நேரம் விளையாடுவது எனக்கு குழப்பமாக இருந்தது. பொதுவாக நான் ஸ்வீப் ஷாட் விளையாடுவேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் முரளிதரன் போன்றவரை உங்களால் எளிதாக படிக்க முடியாது. அந்த வகையில் வார்னேவை விட எனக்கு முரளிதரன் நிறைய அழுத்தத்தைக் கொடுத்தவர். ஆனால் வார்னேவுக்கு எதிராக விளையாடும் போது 2 – 3 மணியளவில் அனைத்து பந்துகளும் நடுவிலிருந்து வரும்”
இதையும் படிங்க: கருண், பண்ட் வெற்றியை முடிச்சு விட்டாங்க.. இந்தியா இப்போவாச்சும் லெவனை இப்படி மாத்தனும்.. ரஹானே பேட்டி
“அவருடைய ஒவ்வொரு பந்தும் அல்லது ஸ்பெல்லும் மேஜிக் போல இருக்கும். அதனாலேயே நான் அவரை அதிகமாக மதிப்பிடுவேன். அவர் மனதளவில் வலுவானவர் என்று நினைக்கிறேன். அவருடைய பந்து வீச்சுக்கு பந்து வீசிய பிட்ச்கள் சாதகமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் மெக்ராத் போன்றவர்களை வைத்துக்கொண்டு அவர் அவ்வளவு விக்கெட்டுகளை எடுத்தது ஸ்பெஷல்” எனக் கூறினார்.



