ஜெயிக்கலானாலும் பரவாயில்லை இதை மட்டும் செய்யுங்க. மே.இ வீரர்களுக்கு – லாரா அறிவுரை

Lara
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பலம் வாய்ந்த இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணியால் வீழ்த்த முடியுமா ? என்பது குறித்து கேள்வி எழுதான் செய்கிறது.

Wi-3

- Advertisement -

இருப்பினும் தற்போது உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி நிறைய அதிரடி ஆட்டக்காரர் களை வைத்துள்ளதால் இந்திய அணிக்கு தனது போட்டியை நிச்சயம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான லாரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது புதிய கட்டமைப்புக்குள் வந்துள்ளது. அதனை ஒழுங்காக கட்டமைத்து வளர்த்து எடுக்க வேண்டிய மிகப்பெரிய கடமை பொல்லார்டுக்கு உள்ளது. இந்திய மண்ணில் இந்தியாவின் வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல அது மிகவும் கடினம். இருப்பினும் இந்த தொடரை நீங்கள் வென்றே ஆகவேண்டும் என்ற எந்த கட்டாயமும் உங்களுக்கு கிடையாது.

Pollard

ஆனால் இந்தியாவிலிருந்து நீங்கள் வரும்பொழுது இந்திய அணிக்கு கடும் சவாலை கொடுத்து வலுவான அணியாக திரும்பி வரவேண்டும். அடுத்த ஆண்டு உலககோப்பை தொடருக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி பழைய பலத்தை பெறவேண்டும் என்றும் லாரா கூறினார்.

Advertisement