இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதிலும் கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய நிலையில் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக விளையாடி வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.
குறிப்பாக 3வது போட்டியில் படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வெற்றிக்காக ஜடேஜா டெயில் எண்டர்களுடன் சேர்ந்து வீரனைப் போல் போராடினார். அதனால் அப்போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்ற இந்தியா 4வது போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது சுந்தருடன் சேர்ந்த ஜடேஜா சதத்தை அடித்து இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
காத்திருக்கும் கிரேட் சாதனை:
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா வாளைப் போல பேட்டை சுற்றி கொண்டாடும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ தெரிவித்துள்ளார். ஏனெனில் அப்படி செய்யும் போது காயமடைந்து சில போட்டிகளைத் தவற விட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்காக நிறைய சாதனைகளைப் படைத்துள்ள ஜடேஜா 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை புரிய வேண்டும் என்றும் பிரட் லீ வாழ்த்தியுள்ளார்.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடுவது வரலாற்றின் மகத்தான சாதனை என்று லீ கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் லீ பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா வாளை சுழற்றுவது போல் கொண்டாடும் போது தனது மணிக்கட்டில் காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. நானும் அதை விரும்புகிறேன். ஆனால் நீங்கள் முதலில் உங்களுடைய உடலைப் பாருங்கள், கடினமாக கொண்டாடாதீர்கள்”
வாழ்த்திய பிரட் லீ:
“தனது நாட்டுக்காக ஏற்கனவே 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அந்த மேஜிக்கான 100 போட்டிகளில் விளையாடுவார் என்று நம்புகிறேன். என்னைப் பொறுத்த வரை தங்களுடைய நாட்டுக்காக 100 டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்கள் அனைவரும் கோட் (கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). நீண்ட காலம் விளையாடிய அவர்கள் அற்புதமான சூப்பர் ஸ்டார்கள்”
இதையும் படிங்க: சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் தான். அதேவேளையில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? – பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்
“அதே போல ஜடேஜா இன்னும் 2 வருடங்களில் மேற்கொண்டு 15 போட்டிகளில் விளையாடி 100 போட்டிகளைத் தாண்டுவார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அஸ்வின், விராட், ரோஹித் ஆகியோரின் ஓய்வுக்கு பின் ஜடேஜா மட்டுமே சீனியர் வீரராக இந்திய அணியில் இருக்கிறார். இப்போதும் நல்ல ஃபிட்னஸ் கொண்டிருக்கும் அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடி கண்டிப்பாக 100வது சாதனைப் போட்டியில் விளையாடுவார் என்று நம்பலாம்.



