ஐ.சி.சி யின் இந்த விதிமுறை கேலிக்கூத்தாக இருக்கிறது. செம ஜோக் – பிரட் லீ கருத்து

Lee
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புதிய நடைமுறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன icc வீரர்களின் சட்டையில் நம்பர் மற்றும் பெயர் அணிந்து விளையாட அனுமதித்துள்ளது. இதுவரை பெயர் மற்றும் நம்பர் இல்லாத ஜெர்சியை அணிந்து விளையாடிய வீரர்கள் தற்போது நம்பர் மற்றும் பெயர் உடையை ஜெர்சியை அணிந்து விளையாடுகிறார்கள்.

Smith

- Advertisement -

Warner

இந்த நடைமுறை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் இருந்து அறிமுகமானது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிரிஸ்ட் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இதனை அடுத்து அந்த அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் சட்டையில் நம்பரையும், பெயரையும் பயன்படுத்துவதை கடுமையாக எதிர்க்கிறேன் இது கேலிக்கூத்தாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொண்டு வந்த பல மாற்றங்களை நான் வரவேற்கின்றேன். ஆனால் இந்த முடிவை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரட் லீ கூறினார்.

Advertisement