விராட் கோலியின் ஆக்ரோஷ குணத்திலும், கேப்டன்சியிலும் நான் இவரை பார்க்கிறேன் – பிரெட் லீ புகழாரம்

Lee

விராட் கோலி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்க துவங்கினார். இவரது காலகட்டத்தில் டெஸ்ட் ஒருநாள் என அனைத்துவிதமான போட்டிகளிலும் பல சாதனைகள் படைத்து விட்டது. ஆனால் ஐ.சி.சி தொடரை மட்டுமே கைப்பற்றவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. ஆனாலும் அதனையும் கோலியின் தலைமையிலான அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Kohli

தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோஷமாக இந்திய அணியை வழிநடத்துகிறார். ஒருநாள் டெஸ்ட் டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் இவரது காலகட்டத்தில் இந்தியா நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. இதற்கெல்லாம் காரணம் அவரது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ விராட் கோலியின் தலைமை பண்பு குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

Lee

விராட் கோலி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவருமே மிகவும் தைரியமான ஆட்கள். சில நேரங்களில் நாம ரிஸ்க் எடுக்க வேண்டியது இருக்கும். அந்த ரிஸ்க்தான் அணியை வெற்றிக்கோ அல்லது தோல்விக்கோ அழைத்துச் செல்லும். அப்படி ஒரு ரிஸ்க்கை எளிதாக எடுக்கும் தன்மை உடையவராய் கோலி திகழ்கிறார்.

- Advertisement -

Ponting

தோனியிடம் இருந்து அணியை பொறுப்பாக வாங்கி சிறப்பாக செயல்பட்டார் கோலி. கேப்டன் பதவியில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் விராட் கோலியிடம் பாண்டிங்கை போல் ஒரு பண்பு இருக்கிறது. சக வீரர்களை சரியாக புரிந்து கொண்டு களத்தில் அவர்களிடம் என்ன தேவையோ அதை வாங்கி விடுவார் அதில் ரிக்கி பாண்டிங் சிறந்தவர். அதேபோன்றுதான் விராட் கோலியிடம் அந்த தன்மையை பார்க்கிறேன் என்று பிரெட் லீ கூறியுள்ளார்.