சர்வதேச கிரிக்கெட்டில் பல தரமான பவுலர்கள் குறிப்பிட்ட சில பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவதை வெறுப்பார்கள். ஏனெனில் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினாலும் அந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு எதிராக தாம் பந்து வீசியதை முற்றிலும் வெறுத்ததாக நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ கூறியுள்ளார்.
குறிப்பாக ஹர்பஜன் சிங் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்து எரிச்சலை கொடுப்பார் என்றும் பிரட் லீ கூறியுள்ளார். அந்த தைரியம் அனைத்தும் 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் நாள் முழுவதும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்த போது உருவானதாகவும் பிரட் லீ தெரிவித்துள்ளார்.
சவாலான ஹர்பஜன்:
அந்த போட்டிக்கு பின் நம்மால் என் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும் நம்பிக்கை இந்தியர்களிடம் வந்ததாகவும் பிரட் லீ பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்பஜன் சிங்கிற்கு எதிராக நான் பந்து வீசுவதை வெறுத்தேன். ஏனெனில் அவர் என்னை துன்புறுத்தினார். இது ஒரு பழைய கதை. அவர் ஒரு ஜாம்பவானை போன்ற வீரர்”
“இதை அவர் கேட்பார் என்று நம்புகிறேன். அவருக்கு எதிராக பந்து வீசும் போதெல்லாம் அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்வார். அதனால் அவரை என்னால் அவுட்டாக்க முடிவதில்லை அவருக்கு எதிராக சோர்வாகவே இருந்தேன். அவர் பேட்டிங் செய்ய வரும் போது நாம் தவறான இடத்தில் பந்து வீசும் சூழ்நிலையில் இருப்பது போல் உணர்வோம். அதனால் நண்பா நீங்கள் ஏன் என்னிடம் சமூகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அவரிடம் சொல்வேன்”
இந்தியாவின் பதிலடி:
“இருப்பினும் அவருக்கு நாங்கள் கொடுத்ததை அவர் எங்களுக்கு திருப்பி கொடுக்க விரும்பும் நல்லவர். இவை அனைத்தும் ராகுல் டிராவிட் மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் ஒரு நாள் முழுவதும் பேட்டிங் செய்ததில் இருந்து துவங்கியது. அப்போது காயத்தால் விளையாடாத நான் அத்தொடரை வீட்டிலிருந்து பார்த்தேன். அத்தொடரில் இந்தியா இப்போது நம்மால் ஆஸ்திரேலியாவை ஒரு போட்டியில் மட்டுமல்ல மொத்தமாக வீழ்த்த முடியும் என்பது போல் விளையாடினார்கள்”
இதையும் படிங்க: இப்படி விளையாடுனா ரோஹித்துக்கு அது செட்டாகாது.. அவரோட டெக்னிக் தப்பு – தினேஷ் கார்த்திக் விமர்சனம்
“தற்போது அது போல விளையாடும் விராட் கோலி நல்ல பிளேயர். அவரிடம் நல்ல ஆக்ரோஷம் இருக்கிறது. கடந்த காலங்களில் எம்எஸ் தோனி பெரிதாக எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் தாம் செய்ய வேண்டியதை அவர் செய்து விட்டு செல்வார்” என்று கூறினார். அந்த வகையில் இப்போதெல்லாம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியினர் அவர்களது வழியிலேயே பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



