இந்த விஷயத்தில் கோலி தான் கில்லி..! அவர்கிட்ட வம்பு வச்சிக்காதிங்க..! – சொந்த நாட்டு வீரரை எச்சரித்த பிரெட் லீ..!

kholifunny
Advertisement

இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்டும் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக விளையாடுவார் என்றும் அவரை ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்க விட மாட்டோம் என்று கருத்து கூறிய ஆஸ்திரேலிய அணியின் இளம் பந்து வீச்சாளர் பேட் கும்மின் செய்துள்ள சவால் பலிக்காது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
kohli
இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளும் அடங்கும் . இந்த தொடரில் இந்திய அணியின் விராட் கோலி சதமடிக்க வாய்ப்பில்லை என ஆஸ்திரேலிய அணியின் இளம் பந்து வீச்சாளர் பேட் கும்மின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பேட் கும்மின் கூறிய கருத்தை மறுத்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறுகையில்” கோலியிடன் அவரை பற்றி நிரூபிக்க நிறைய விடயங்கள் உள்ளது. அவன் தான் ஏன் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை இந்த வருடமும் நிரூபிப்பார். “அவர் கண்டிப்பாக சதம் அடிப்பார். ஏனெனில் அவரை போல ரன் எடுக்கும் தாகத்தை கொண்ட ஒரு பேட்ஸ்மேனை பார்த்தது இல்லை.
bretlee
மேலும் இந்திய அணி கடந்த 2011-12 ஆம் ஆண்டு விளையாடிய போட்டியிலும் 2014-15 விளையாடிய தொடரிலும் தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சர்கள் கையில் தான் அனைத்தும் உள்ளது. இந்திய அணியை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க வைத்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று விடலாம். அப்படிபட்ட பந்து வீச்சாளராகளும் நம்மிடம் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement