ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையை விட இந்தியாவில் இந்த தொடர் மிக முக்கியம் – மெக்கல்லம் யோசனை

Mccullum
- Advertisement -

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முன்பாக இந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பெரிய திருவிழாவான ஐபிஎல் தொடரும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.தொடர் நடைபெறுவது சந்தேகம் ஆகியுள்ளது.

Cup

- Advertisement -

மேலும் அடுத்து எப்போது கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்பது குறித்த எந்த ஒரு தகவலையும் எந்த ஒரு கிரிக்கெட் நிர்வாகமும் இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிட்டபடி உலக கோப்பை தொடர் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது இருக்கும் சூழ்நிலை சரியாகி மீண்டும் கிரிக்கெட் வழக்கம்போல் துவங்க இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கலம் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 உலகக் கோப்பை தொடரை ஒத்திவைத்துவிட்டு ஐபிஎல் தொடரை அக்டோபர் மாதம் நடத்த வேண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடியாது. ஏனென்றால் 16 சர்வதேச அணிகள், வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு என மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது.இதனால் ஏற்படும் இழப்பு மிகப்பெரியதாக அமையும்.

- Advertisement -

அதனால் அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்திவிட்டு ஐசிசி மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியங்களுடன் கூட்டம் நடத்தி இந்த டி20 உலகக் கோப்பையை அடுத்த ஆண்டுக்கு நடத்த திட்டமிடலாம். ஏனென்றால் வர்த்தக ரீதியாக பெரும் பாதிப்பினை ஐசிசியும் இதன்மூலமாக சந்திக்கும் அதனால் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் டி20 உலகக்கோப்பையை நடத்துவது அவ்வளவு நல்லது கிடையாது.

Ipl cup

எனவே இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் நடத்திவிட்டு அடுத்த ஆண்டு மறு திட்டமிட்டு உலக கோப்பையை நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement