செப்டம்பர் மதம் கல்யாணம் ! கல்யாணத்த நிறுத்துங்க !காதலி டேனி-ஸ்மித்துக்கு வந்த புதிய சிக்கல்

Steve-Smith
- Advertisement -

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டாலும் அவர்மீதான கோபம் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இன்னும் குறையவேயில்லை போல.தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தி மாட்டிக்கொண்டார் கேம்ரூன் பேன்கிராப்ட். முதலில் கேட்டபோது இல்லையென்று மறுத்தாலும் பின்னர் கேமராவில் ஆதாரத்துடன் காட்சிகள் பதிவாகியிருந்ததால் செய்த தவறை ஒப்புக்கொண்டார். மேலும் தான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் ஆகியோருக்கும் தொடர்புள்ளது என்று கூற அந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.

Steve Smith

- Advertisement -

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கும் பங்கிருப்பதாக ஸ்டீவன் ஸ்மித் ஒப்புக்கொண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.பின்னர் அதன் தொடர்ச்சியாக ஐசிசி ஸ்மித்திற்கு அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க மற்றொருபுறம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒருவருட தடை விதித்தது.

ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு ஸ்மித் இந்திய ஐபிஎல்-இல் இந்தாண்டு விளையாடிட மாட்டார் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் அறிவித்துவிட்டார்.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஏற்கனவே பல இழப்புகளை சத்தித்துள்ள ஸ்மித் வரும் செப்டம்பர் மாதத்தில் தனது காதலியும் வழக்கறிஞருமான டேனி வில்சை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சமூகவளைத்தளங்களில் டேனி வில்சிடம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பலரும் நீங்கள் ஸ்மித்தை திருமணம் செய்வதை பற்றி பரிசீலிக்க வேண்டும், ஸ்மித் ஒரு ஏமாற்று பேர்வழி, நீங்கள் ஸ்மித்திற்கு ஆதரவாக பேசாதீர்கள் என பலரும் தங்களது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

dani willis

ஆனால் இந்த எந்தவொரு கருத்துக்கும் டேனி வில்சி பதிலளிக்காமல் அமைதி காத்துவருகின்றார்.எனவே வரும் செப்டம்பர் மாதம் இருவருக்குமான திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் திருமணம் தடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Advertisement