தோனி பற்றி சில ரகசியங்களை வெளியிட்ட சென்னை வீரர் – விவரம் உள்ளே

MS
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளன.
ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Bravo

- Advertisement -

8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஐபிஎல்-இன் முதல் ஆட்டத்திலேயே வலுவான இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.

இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.ஐபிஎல் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் அனைத்து அணியின் வீரர்களும் தற்போது இறுதிக்கட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

dhoni

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை அணி வெற்றிபெரும் போதெல்லாம் பிரோவின் நடனம் சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே இட்டுச் செல்லும்.இந்நிலையில் இன்று ஐபிஎல்-இன் அதிகாரப்பூர்வ சென்னை இணையதளத்தில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லக்குட்டி பிராவோ தோனியை பற்றிய சில ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த ஐபிஎல்-இல் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இன்னும் வித்தியாசமாக முயற்சிப்பேன்.இரண்டாண்டு தடைக்கு பின்னர் ஐபிஎல்-இல் சென்னை அணி விளையாடவுள்ளது மகிழ்ச்சி.அதுவும் ஐபிஎல்-இன் முதல்போட்டியே வலுவான சென்னை மற்றும் மும்பை அணிகளிடையே நடைபெறவுள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

Bravo1

ஐபிஎல் வலைப்பயிற்சிக்காக சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடும் போது தோனிக்கு பந்துவீசும் போது பெரும்பாலும் நான் கடைசி ஓவரை வீசுவதாக மனதில் நினைத்துக்கொண்டு தான் பந்துவீசுவேன். அப்படி பந்துவீசும் போது சிலநேரங்களில் பின் ஜெயிப்பேன், சிலநேரங்களில் அவர் ஜெயிப்பார். கிரிக்கெட் உலகில் தோனி எப்போதுமே சிறந்த பினிஷர்.என்னை போன்ற வீரர்கள் தவறுசெய்தால் அவர்களுக்கு செய்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும் தலைசிறந்த தலைவர் என்றார்.

Advertisement