நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கான மரியாதையை கொடுங்க – சமிக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கிய மே.இ வீரர்

bravo
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் 46 வயது நிரம்பிய ஜார்ஜ் ப்ளையாட் என்பவர் அமெரிக்காவில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் காவலர்கள் அவரை கொடுமைப்படுத்தி காலால் கழுத்தை அறுத்து ஈவுஇரக்கமின்றி கொன்றதாகவும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அமெரிக்காவில் மிகப் பெரும் போராட்டங்கள் வெடித்தது.

america

- Advertisement -

இதற்கு உலகின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த இந்த இனவாத தாக்குதலுக்கு எதிராக அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற கருத்தும் பொது முழக்கமாக எழுப்பப்பட்டது. அதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் அந்த இரக்கமற்ற செயலுக்கு எதிராக தங்களது வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தானும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போது இதேபோன்ற இனவாத தாக்குதலுக்கு ஆளானேன் என்ற அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நான் விளையாடிய போது ஒரு போட்டியில் தன்னையும் இலங்கை வீரர் திசாரா பெரேரா ஆகிய இருவரையும் சிலர் மைதானத்தில் “கலு” என்ற வார்த்தையை வைத்து சத்தமாக அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

Sammy 1

கலு என்கிற அந்த வார்த்தைக்கு அர்த்தம் யாதெனில் கருப்பு நிறத்தை சேர்ந்த வலுவான நபர் என்று நினைத்துக் கொண்டதாகவும், பின்னர் அது “கருப்பர்” என தெரிந்ததும் மனஉளைச்சல் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்றொரு வீரரான பிராவோ தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் உலக அளவில் நடத்தப்படும் இரவில் தாக்குதல்கள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

bravo

ஒரு கருப்பின மனிதனாக உலக வரலாற்றில் கறுப்பினத்தவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியும். ஆனாலும் இப்போதும் நாங்க பழி வாங்க வேண்டும் என்று கேட்கவில்லை எங்களுக்கு உண்டான மரியாதைக்கும், சம உரிமைக்காக மட்டுமே நாங்கள் குரல் கொடுக்கிறோம் அவ்வளவுதான். மற்றவர்களுக்கு உரிய மரியாதை நாங்கள் கொடுக்கிறோம் ஆனால் எங்கள் மீது மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப் படுகின்றன என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் உலகில் மாபெரும் மனிதர்களை பாருங்கள் நெல்சன் மண்டேலா, முகமது அலி, மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்டவர்கள் எங்களின் முன்னோடிகள் இருக்கிறார்கள். இதுவரை நடந்தது போதும் இனிமேல் எங்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பழிக்குப்பழி வேண்டாம், போர் வேண்டாம், எங்களுக்கு மரியாதை மட்டும் தான் வேண்டும் என்று கூறியதுடன் எல்லோரும் அன்பு செலுத்த வேண்டும் அதுதான் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement