ஜூலை 7 தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உங்க டேன்ஸ் இடம்பெற வேண்டுமா ? – ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

Bravo
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி கடந்த 10 மாதங்களாக கிரிக்கெட் விளையாட வில்லை என்றாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தற்போது ஜூலை 7ஆம் தேதி தனது 39 வது பிறந்தநாளை தோனி கொண்டாட இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடி வரும் தோனிக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. ஐ.பி.எல் லீக் கிரிக்கெட் போட்டியை மிகப்பெரிய அளவிற்கு கொண்டு சென்றதில் சிஎஸ்கே பங்கு அதிகம் என்றால் அது மிகையல்ல. தோனியின் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் சென்னை ரசிகர்கள் தோனியை தல என்று அழைப்பார்கள்.

- Advertisement -

வரும் ஜூலை 7ம் தேதி 39வது பிறந்தநாளை கொண்டாட போகும் தோனிக்கு சென்னை அணியை சேர்ந்த சக வீரரான டுவைன் பிராவோ பிறந்தநாள் பாடல் ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த பாடலை ஏழாம் தேதி வெளியிட உள்ளார். மேலும் அந்தப்பாடலின் டீசரை வெளியிட்ட பிராவோ : “நாங்கள் ஜூலை ஏழாம் தேதி காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்” சாம்பியன் அணியுடன் சிறந்த பாடல் டிராக்கோடு அவரது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உங்களுடைய வீடியோவும் இடம்பெற வேண்டுமென்றால் கீழ்க்கண்ட ஹேஷ் டேக்கில் உங்கள் வீடியோக்களை பதிவிடுங்கள் என்று பிராவோ சில ஹேஷ்டேக்கலை பதிவிட்டுள்ளார். அதன்படி நீங்களும் தோனியின் வெறித்தனமான ரசிகர்கள் எனில் உங்களது வீடியோவை டுவைன் பிராவோ பதிவிட்டிருக்கும் @djanamusic @ultrasimmo @collegeboyjesse @arielle.alexa @dexterrthomas @DJBravo47 இந்த ஹேஷ்டேக் மூலம் பதிவிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கீழ்கண்ட ஹேஷ்டேக்களில் உங்களது வீடியோக்களை பதிவிடலாம். இந்திய அணியின் கேப்டனான தோனி மூன்று வகையான ஐசிசி டிராபிகளையும் வென்று கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் இவரது தலைமையில் மூன்று முறை சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement