- Advertisement -
ஐ.பி.எல்

SRH vs KKR : அவங்க நம்மல தோக்கடிக்கல. நாம தான் வம்படியா போயி வெற்றியை அவங்ககிட்ட குடுத்திருக்கோம் – பிரைன் லாரா விளாசல்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக கேப்டன் நித்திஷ் ராணா 42 ரன்களையும், ரிங்கு சிங் 46 ரன்களையும், ரசல் 24 ரன்களையும் குவித்து அசத்தினர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக நடராஜன் மற்றும் மார்க்கோ யான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 38 ரன்கள் தேவை என்கிற நிலையில் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருந்ததால் சன்ரைசர்ஸ் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வேளையில் கையில் இருந்த வெற்றியை கொல்கத்தா அணிக்கு சன்ரைசர்ஸ் அணி தாரை வார்த்தது. இப்படி சன்ரைசர்ஸ் அணி பெற்ற தோல்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் பிரைன் லாராவுக்கு கடும் கோபத்தினை உண்டாக்கியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து விமர்சித்து பேசியுள்ள பிரைன் லாரா கூறுகையில் : பவர்பிளே ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சம் இரண்டு விக்கெட்டுகளை இழந்து விடுகின்றனர். அதுவே நமது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இப்படி பேட்டிங் செய்தால் நாம் எப்படி தொடர்ச்சியாக ஜெயிக்க முடியும். கிளாசன் அற்புதமாக விளையாடி வருகிறார். அவர் 6 ஆவது இடத்தில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : IPL 2023 : ராஜஸ்தானை அவங்க முந்திடுவாங்க, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லக்கூடிய 4 அணிகள் இது தான் – ஹர்பஜன் கணிப்பு

நமது அணியில் நல்ல தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் விக்கெட்டுகளை இழப்பது அணிக்கு பின்னடைவை தருகிறது. பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என பேட்ஸ்மேன்களை லாரா விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by