ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை விளையாடி முடித்துள்ளது. இதில் ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றின. கே.எல் ராகுல் வழக்கம்போல் தனது பேட்டிங் திறமையை வெறித்தனமாக வெளிப்படுத்தி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் பின்வரிசையில் களமிறங்கி விளையாடி வரும் கே எல் ராகுல் லிமிடெட் ஓவர்களில் துவக்க வீரராக மிகவும் சிறப்பாக செயல்படும் வீரர் ஆவார். இவர் டி20 போன்ற தொடர்களில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக திகழ்கிறார்.
கே எல் ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு 40 பந்துகளில் 51 ரன்கள் அடித்து உள்ளார். இதில் ஒரு சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகளும் விளாசியுள்ளார். மொத்தம் மூன்று டி20 போட்டிகளில் 81 ரன்கள் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார் கே எல் ராகுல். இதற்கு முன் நடைபெற்ற 3 ஒருநாள் தொடர்களில் கே எல் ராகுல் 93 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராகவும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் தனியாளாக செயல்பட்டு வருகிறார் கே எல் ராகுல். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளிலும் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை அடித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மாவிற்கு அடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதம் அடித்த வீரராகவும் ராகுல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா தனது மனம் கவர்ந்த வீரராக கே எல் ராகுல் திகழ்வதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில் “கே எல் ராகுல் இந்திய அணியின் பெஸ்ட் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு ஷாட்டும் பார்ப்பதற்கே மிகவும் அற்புதமாக உள்ளது. பிராப்பர் கிரிக்கெட் ஷாட்டுகளை மட்டும் மிக சாதூர்யமாக விளையாடி வருகிறார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வருகிறார். இவரது ஆட்டம் பார்ப்பதற்கே மிகவும் இனிமையாக இருக்கும். அதுமட்டுமின்றி இவருடைய பேட்டிக் டெக்னிக் மிகவும் சிறப்பாக இருக்கிறது. கே எல் ராகுல் விளையாடிய கடைசி 12 டி20 இன்னிங்சில் 7 முறை அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.