பாபர் அசாமும் விராட் கோலியும் ஒன்னா? அர்த்தமில்லாம பேசாதீங்க.. ஃபகார் ஜாமனுக்கு ப்ராட் ஹோக் பதிலடி

Bradd Hogg
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆனால் அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே சொந்த மண்ணில் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அத்துடன் 147 டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியில் சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.

இது போக கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோற்றது. இந்த தோல்விகளுக்கு பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் பாபர் அசாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் சமீபத்திய வருடங்களாகவே அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

- Advertisement -

விராட் கோலியுடன் ஒப்பீடு:

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் பொறுத்திருந்து பார்த்த பாகிஸ்தான் வாரியம் பொறுமையிழந்து இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு என்ற பெயரில் பாபர் அசாமை கழற்றி விட்டுள்ளது. அவருடன் ஷாஹீன் அப்ரிடி, நாசிம் ஷா ஆகியோரையும் பாகிஸ்தான் வாரியம் கழற்றி விட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் 2019க்குப்பின் 2023 வரை விராட் கோலி 19.33, 28.21, 26.50 என்ற மோசமான சராசரியிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ததாக பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் கூறியுள்ளார். ஆனால் அப்போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாமை ஒதுக்குவது சரியல்ல என்றும் ஃபகார் ஜமான் ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

ரெண்டு பேரும் ஒன்னா:

இந்நிலையில் விராட் கோலியுடன் பாகிஸ்தானின் பாபர் அசாமை ஒப்பிடுவது அர்த்தமற்றது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் அவருக்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்படுகிறார் என்ற செய்தியின் காரணமாக விராட் கோலி – பாபர் அசாம் ஆகியோரின் சுமாரான ஃபார்மை ஒப்பிடுவது அர்த்தமற்றது”

இதையும் படிங்க: என்ன ஒரு முட்டாள் தனம்.. பாபர் அசாம் விடயத்தில் பாகிஸ்தான் செய்தது தவறு – மைக்கல் வாகன் விளாசல்

“ஏனெனில் விராட் கோலி ஃபார்மை இழந்து தடுமாறிய காலகட்டத்தில் இந்தியா உலகிலேயே 2வது அதிக வெற்றியை பெற்று வெற்றி நடை போட்டது. ஆனால் பாபர் அசாம் தடுமாறும் இந்த நேரத்தில் பாகிஸ்தான் உலகிலேயே 2வது அதிக மோசமான சராசரி விகிதத்தில் வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே கடினமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement