இந்திய அணியின் டிவில்லியர்ஸ் இவர்தான் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் – பிராட் ஹாக் கருத்து

Hogg

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

INDvsENG

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் அறிமுகமாக போகிறார்கள் என்று என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த தொடரில் மூன்று புதுமுக வீரர்களை அணியில் சேர்த்து உள்ள இந்திய அணி அதில் யாரை களமிறக்கும் என்பதை இதுவரை கூறவில்லை.

எனவே இந்த போட்டியில் எந்தெந்த வீரர்கள் அறிமுகமாவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கோலி கூறுகையில் இன்றைய போட்டியில் அஸ்வின் விளையாட மாட்டார் என்றும் சுந்தர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்காக எந்த வீரர் அறிமுகமானால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Sky

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாதியா ஆகிய மூன்று புதுமுகங்கள் இருக்கிறார்கள். இவர்களில் சூர்யகுமார் யாதவ் பொறுத்தவரை அவர் ஒரு சிறப்பான அற்புதமான டி20 வீரர். ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர் 360 டிகிரியிலும் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றவர். எனவே அவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

SKY

மேலும் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் டெஸ்ட் தொடரில் மைதானம் ஸ்பின்னர்க்கு சாதகமாக இருந்தது. எனவே இந்த டி20 தொடரில் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே இந்திய வீரர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர் உடன் களம் இறங்குவது சிறப்பானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.