சொல்வதற்கு கஷ்டமா இருக்கு. இனிமேல் இந்த இந்திய வீரர் அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை – பிராட் ஹாக் கருத்து

Hogg
- Advertisement -

கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல போட்டிகள் துவங்கும் அறிகுறிகள் தென்படுகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் இந்த தொடர் நடக்க உள்ளதை அதிகாரபூர்வமாக ஐபிஎல் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது முன்னாள் வீரர்கள் பலரும் தற்போதைய கிரிக்கெட் சூழல் குறித்த தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் சமூக வலைதளம் மூலமாக இந்த ஓய்வு நேரத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் இந்திய அணியின் இடது கை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா குறித்து சில விடயங்களை பகிர்ந்துகொண்டார்.

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த ரெய்னா 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்களும் அதுமட்டுமின்றி 18 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார்.

Raina

பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கில் மிரட்டக்கூடிய ரெய்னா இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ் என ரசிகர்களால் புகழப்பட்டார். அந்த அளவிற்கு சிறப்பான பீல்டிங் செய்யும் திறன் படைத்தவர். இந்நிலையில் தற்போது 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அணியில் இருந்து மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்ட சுரேஷ் ரெய்னா அதன்பிறகு இந்திய அணிக்கு திரும்பவே இல்லை.

- Advertisement -

இந்நிலையில் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று தற்போது பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதற்கடுத்து கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் என மிடில் ஆடர் வலுவாகவே உள்ளது. மேலும் ஜடேஜா, பாண்டியா என பேட்டிங் வரிசை பலமாக இருப்பதால் இனி வரும் காலங்களில் ரெய்னாவை திரும்பவே முடியாது.

Raina

தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நன்றாக செட் ஆகிவிட்டது. எனவே இனி இந்திய அணியில் ரெய்னாவுக்கு ரோல் கிடையாது. சுரேஷ் ரெய்னா மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் தான் பேட்டிங் மட்டுமல்லாது பீல்டிங்கும் சிறப்பாக செய்யக்கூடியவர் அதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் சொல்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது அவர் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று ஹாக் கூறினார்.

Advertisement