சுப்மன் கில் கிட்ட இந்த வீக்னஸ் இருக்கு. அதனால யார் வேணுனாலும் அவர் விக்கெட்டை வீழ்த்தலாம் – பிராட் ஹாக் கருத்து

Hogg
- Advertisement -

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அறிமுகமான சுப்மன் கில், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அந்த தொடரில் அற்புதமாக ஆடிய அவர், கபா மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற ஒரு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.

gill

- Advertisement -

இப்படி அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்த பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக அவரிடம் இருக்கும் ஒரு சிறிய வீக்னஸை சுட்டிக் காட்டி பேசியுள்ளார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ப்ராட் ஹாக். சுப்மன் கில்லின் வீக்னஸ் குறித்து பேசிய அவர், சுப்மன் கில்லுக்கு எப்போதெல்லாம் நீங்கள் பந்து வீச போகிறீர்களோ அப்போதெல்லாம், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே தான் பந்துகளை வீச வேண்டும். அது மாதிரியான பந்துகளில் அவர், அரைகுறையான கட் ஷாட் அல்லது அரைகுறையான பேக் ஃபூட் ட்ரைவ் இதைத்தான் ஆடுகிறார்.

இதுதான் அவரிடம் உள்ள ஒரு சிறிய வீக்னஸ். புது பந்துகளில் இந்த மாதிரியான பந்தை நீங்கள் அவருக்கு வீச வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டத்தை பார்த்த ப்ராட் ஹாக், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் அவரைத் தான் ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்ற கருத்தை இதற்கு முன்னராகவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

gill 1

சுப்மன் கில் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அதற்கடுத்து இந்தியாவில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் தேவையில்லாத ஷாட்களை ஆடி தனது விக்கெட்டை எளிதில் பறிகொடுத்திருக்கிறார்.

gill

இந்த தவறை அவர் சரி செய்து கொண்டு வரவிருக்கும் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து தர வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement