இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தோற்றது இவரால் தான் – பிராட் ஹாக் பேட்டி

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்களை இந்திய ரசிகர்களும், முன்னாள் வீரர்கள் பலரும் ஒவ்வொன்றாக கூறி வருகின்றனர். அதில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனை தேர்வு செய்ததையும், சொதப்பலான பேட்டிங்கையும் மட்டுமே பெரும்பாலானோர் காரணங்களாக கூறிவருகின்றனர். இந்நிலையில் புதிய காரணம் ஒன்றை தேடிப் பிடித்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ப்ராட் ஹாக். அவர் கூறிய காரணத்தை கேட்ட ரசிகர்கள், இது நம்ம லிஸ்ட்லியே இல்லையே என்ற ரீதியில் தங்களது ரியாக்‌ஷன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

IND

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் 53 ஓவர்களில் 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் நான்காவது இன்னிங்சை தொடங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டெவான் கான்வே மற்றும் டாம் லதாம் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் கேன் வில்லியம்சனுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ராஸ் டெய்லர். இந்த இணை இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அந்த அணியை வெற்றி பெற வைத்தது. தற்போது இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ப்ராட் ஹாக், ராஸ் டெய்லர் கொடுத்த கேட்சை சேட்டேஸ்வர் புஜாரா தவறவிட்டதால் தான் இந்தி அணி தோல்வியை சந்தித்தது என்று கூறியுள்ளார்.

நான்காவது இன்னிங்சின் 31வது ஓவரில் ஸ்லிப்பில் நின்றிருந்த புஜாரா, ராஸ் டெய்லர் கொடுத்த கேட்சை தவறவிட்டார். ஆனால் அப்போது நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 55 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதைக் குறிப்பிட்டு பேசிய ப்ராட் ஹாக் கூறியதாவது, இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது.

Southee-2

இந்தியாவிற்கும் இந்த போட்டியில் நிறைய வாய்ப்புகள் இருந்தன. புஜாரா மட்டும் ராஸ் டெய்லரின் கேட்சைப் பிடித்து இருந்தால், இந்த போட்டியின் முடிவானது எப்படி வேண்டுமானாலும் மாறி இருக்கும். நியூசிலாந்து அணியின் வீரர்களான நிக்கோலஸ் மற்றும் வாட்லிங் என இருவரும் காயமடைந்திருந்தனர். எனவே அனைத்து அழுத்தமும் நியூசிலாந்து அணியின் மீதுதான் இருந்திருக்கும். 55 ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் ராஸ் டெய்லர் போன்ற அனுபவ வீரரின் விக்கெட்டை எடுத்திருந்தால், கேன் வில்லியம்சனும் பெரிய ஷாட்கள் ஆட தயங்கி இருப்பார். எனவே இந்த போட்டியின் முடிவானது ட்ராவை நோக்கிக்கூட சென்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

shami 2

இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக கேப்டன் விராட் கோஹ்லி, புஜாராவின் பேட்டிங் வரிசையில் விளையாடப் போவதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் சொதப்பி வரும் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்திருப்பதாவுகம் தெரிய வந்திருக்கிறது.

Advertisement