விராட் கோலி அடுத்தடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலக காரணம் இதுதான் – பிராட் ஹாக் கருத்து

Hogg

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 வடிவத்திலான கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இது மாறியது. அதனை தொடர்ந்து தற்போது நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணி போட்டிக்கு முன்பாக இந்த ஆண்டுடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அடுத்தடுத்து அதிர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

Kohli

இப்படி தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி பதவி விலகி வருவது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் விராட் கோலியின் இந்த விவகாரம் குறித்து சர்ச்சையான ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி அடுத்தடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலகுவதன் காரணம் யாதெனில் டெண்டுல்கரின் 100 சதங்கள் அடிக்கும் சாதனையை தற்போது அவர் குறி வைத்துள்ளார். இதன் காரணமாகவே அதனை சமன் செய்யும் முயற்சியில் ஈடுபடவே கோலி இதுபோன்று பதவி விலகி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.

இவர் ஏன் இப்படி ஒரு கருத்தை வெளிப்படுத்தினார் என்பது புரியவில்லை. அணியின் நலனுக்காகவும், பணிச்சுமை காரணமாகவும் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் இவ்வாறு தனிப்பட்ட சாதனைக்காக கோலி பதவி விலகியுள்ளார் என்று பிராட் ஹாக் கூறியுள்ள இந்த கருத்து தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரராக சச்சின் திகழ்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களையும் விளாசியுள்ளார். அதேபோன்று விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் 27 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 43 என 70 சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement