விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக கேப்டன்சி செய்ய இதுவே காரணம் – பிராட் ஹாக் ஓபன்டாக்

Hogg
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று இருக்க வேண்டிய வாய்ப்பை மழை தட்டிப் பறித்தது. இதன் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை 25ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்திய அணி சமீப காலமாக பெற்று வரும் சிறப்பான வெற்றிகளுக்கு விராத் கோலியின் அற்புதமான கேப்டன்சி தான் காரணம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் விராத் கோலியின் திறமையான கேப்டன்சி தான். அவர் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். புதுமுக வீரர்களை அவர்களது வழியில் சுதந்திரமாக விளையாட அனுமதி அளிக்கிறார். இதன் காரணமாக எந்த வீரர் இந்திய அணியில் விளையாடினாலும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எந்தவித பதற்றமும் இன்றி சிறப்பாக விளையாடுகிறார்கள்.

Bumrah

மேலும் வீரர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை உணர்ந்து கேப்டன் கோலியும் செயல்படுகிறார். அதுமட்டுமின்றி தேவையான நேரத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்வது திட்டத்தை சரியாக செயல்படுத்துவது என அணியை ஒரு கட்டுக்கோப்பாக வழிநடத்துகிறார். இதன் காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களது சிறப்பான வெற்றிகளை குவித்து வருகிறது என பிராட் ஹாக் விராட் கோலி கேப்டன்சி குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

Kohli

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 37 வெற்றிகளை பெற்று அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் 4வது இடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement